கோவில்பட்டமுத்துமாரியம்மன் கோவில் கொடைவிழா
கோவில்பட்டமுத்துமாரியம்மன் கோவில் கொடைவிழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி லெனின்நகர் கற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீர கருப்பசாமி கோவில் 46-வது கொடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு எட்டயபுரம் ரோடு மங்கள விநாயகர் கோவில் முன்பிருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடனாக பால்குடம், தீர்த்த குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக மந்தித்தோப்பு ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோவிலில் அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story