கோவில்பட்டி பாண்டிமுனீஸ்வரர் கோவில்கொடைவிழா
கோவில்பட்டி பாண்டிமுனீஸ்வரர் கோவில்கொடைவிழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் 50-ஆம் ஆண்டு ஆடி பொங்கல் கொடை விழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.விலிருந்து நீக்கி விட்டோம். அவர் யாருடன் சேர்ந்து பணியாற்றினாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்போம். கோவில்பட்டியில் விமான பயிற்சி தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதை வரவேற்கிறோம். ஏற்கனவே ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா ஆட்சியில் கோரிக்கை வைத்தோம். காலப்போக்கில் அது நிறைவேறாமல் போய்விட்டது. இப்போது அமைச்சர் கூறி இருப்பதை செயலில் காட்ட வேண்டும், என்றார்.