கோவில்பட்டி எஸ்.எஸ். டி.எம். கல்லூரியில் உணவு பாதுகாப்பு தினவிழா
கோவில்பட்டி எஸ்.எஸ். டி.எம். கல்லூரியில் உணவு பாதுகாப்பு தினவிழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியில் என். எஸ். எஸ். திட்டம் சார்பில் உணவு பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கந்தசாமி, பொருளாளர் மகேஷ் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் சந்திரசேகர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு, விளாத்திகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பின் அவசியம் மற்றும் துரித உணவுகளால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பேசினா். திட்ட அலுவலர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story