கோவில்பட்டி வேலாயுதபுரம் காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி வேலாயுதபுரம் காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன்- காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு உறவின்முறை சங்க தலைவர் ஆர்.வி.எஸ்.வேல் முருகேசன், துணை தலைவர் அழகுவேல், செயலாளர் சண்முகராஜா, துணை செயலாளர் வள்ளியப்ப ராஜ், பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் மேளதாளம் முழங்க மங்களப் பொருட்களுடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 10.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆடிப் பொங்கல் விழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 7.35 மணிக்கு பூஜைகள், மாலை 5 மணிக்கு மாலை பூஜை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி பூஜை, அம்மன் திருவீதி உலா, தொடர்ந்து கலையரங்க சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிறுவர்- சிறுமிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறைசங்க தலைவர் தலைமை தாங்கினார். மன்ற துணை தலைவர் முன்னிலை வகித்தார். நற்பணி மன்ற தலைவர் அருண்பாண்டியன் வரவேற்றுப் பேசினார். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் பரிசு வழங்கி பாராட்டினார்.


Next Story