கோவில்பட்டிசொர்ணமலை கதிரேசன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது
கோவில்பட்டிசொர்ணமலை கதிரேசன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை, சண்முகர் ஜெபம் நடந்தது. காலை 10.30 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகன் வள்ளி- தெய்வானைக்கு 21 வகை மூலிகைகளால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு கோவில் முன் மண்டபத்தில் 23 கிலோ எடை கொண்ட வெண்கல கொப்பறையில் நெய் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்டளை தாரர்ரான கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ. பி. கே. பழனிச் செல்வம்-ஜெயலட்சுமி தம்பதிகள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story