திருவெண்ணெய்நல்லூரில்கிருபாபுரீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றம்திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருவெண்ணெய்நல்லூரில்கிருபாபுரீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றம்திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாதம் 12 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆனால், கோவிலில் நடந்த திருப்பணிகள் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது, பங்குனி மாத விழா வெகுவிமரிசையாக நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று காலை சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், கோவில் முன்புள்ள கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, விழா கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்தை தடுத்தாட்கொண்ட நிகழ்வு, மனப்புத்தூரில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் வரை நடைப்பயணமாக சென்று திருவெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றத்தில் வழக்குரைத்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் மற்றும் கிராம பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வீதிஉலா நடைபெற இருக்கிறது. இதில் வருகிற 3-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேரோடும் வீதியில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. அதேபோன்று, தாழ்வாக சென்ற மின்கம்பிகளையும் சரிசெய்யும் பணி நடந்தது. இப்பணியில் பேரூராட்சி மற்றும் மின் ஊழியர்கள்,கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story