சிங்காரவேலவர் கோவிலில் சித்திரை கிருத்திகை வழிபாடு


சிங்காரவேலவர் கோவிலில் சித்திரை கிருத்திகை வழிபாடு
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

சிங்காரவேலவர் கோவிலில் சித்திரை கிருத்திகை வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமான் சிக்கலில் அம்மனிடம் வேல் வாங்கி செந்தூரில் சூரனை வதம் செய்ததாக புராணம் கூறுகிறது. பிரசித்திப்பெற்ற முருகன் கோவில்களுள் ஒன்றான இக்கோவிலில் நேற்று சித்திரை மாத கிருத்திகை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story