முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை விளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜை நடைபெற்று புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்தது. பின்னர் கோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் பரிகார தெய்வங்களுக்கும், கோவில் கோபுரங்களிலும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விளத்தூர் கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story