சர்வதேச அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு


சர்வதேச அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
x

சர்வதேச அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

சமுதாய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிலையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் முயற்சி என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் 164 நாடுகளில் இருந்து மத்திய, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளி மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், சுயநிதி ஆகிய பள்ளிகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்கு பெற்றன. இதில் இந்தியாவில் இருந்து 31 படைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளான இந்தோனேஷியா, உகாண்டா, எகிப்து, உள்ளிட்ட நாடுகளில் இருந்து 12 படைப்புகள் என 43 படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.

இதில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர்கள் பூவரசன் மற்றும் யுவராஜா ஆகியோர் தமிழக அளவில் 2 மற்றும் 3-ம் பரிசு பெற்னர் சர்வதேச கண்காட்சியில் பூவரசன் என்ற மாணவர் கண்டுபிடிப்பான அலைபேசி ப்ளூடூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தி இயக்கும் படைப்பை காட்சிப்படுத்தினார். அதேபோன்று யுவராஜா என்ற மாணவர் இலக்கை கண்டுபிடிக்கும் ரோபோ படைப்பை காட்சிப்படுத்தினார். இதில் பூவரசன் என்ற மாணவர் கண்டுபிடிப்பு 3-வது பரிசாக சர்வதேச அளவில் இளம் ஐன்ஸ்டீன் என்ற சாதனை பாராட்டு சான்றுடன் விருது பெற்றார். யுவராஜா பங்கேற்பு சான்றிதழ் பெற்றார். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியர் தனபால் ஆகியோரையும் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ேநரில் அழைத்து பாராட்டினார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் அங்கையர் கன்னி, முதன்மை கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story