சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x

சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டினர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தேசிய அளவில் மராட்டியத்தில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் தமிழக அணி சார்பாக வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெள்ளி பதக்கம், 19 வயதுக்குட்பட்ட கலப்பு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வாழ்த்தினார். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரவிசங்கர், உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமரேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.



Next Story