பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு


பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து திருவாரூர் நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்


பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து திருவாரூர் நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரசபை கூட்டம்

திருவாரூரில் நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், ஆணையர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் அய்யப்பன், மேலாளர் முத்துக்குமார், சுகாதார அலுவலர் மூர்த்தி, ஆய்வாளர்கள் தங்கராம், ரவிச்சந்திரன், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

மழைநீர் வடிகால்

துணைத்தலைவர்:- எனது பகுதியில் தற்போது பெய்யும் மழையிலேயே சாலைகளில் வெள்ள பெருக்கெடுத்து குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே மழைக்காலம் தொடங்கும் நிலையில் அனைத்து பகுகளிலும் மழைநீர் வடிகால்களை தூர்வாரி, தேவையான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

கலியபெருமாள் (அ.தி.மு.க.):- தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது. எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்க கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் இயற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரதராஜன் (தி.மு.க.):- புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி, குறைகள் இன்றி பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

பாதாள சாக்கடை பணிகள்

அய்யனார் (தி.மு.க.):- திருவாரூரில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

பிரகாஷ் (தி.மு.க.):- புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள ஆணையர் காலை நேரங்களில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருவது பாராட்டுக்குரியது.

சங்கர் (தி.மு.க.):- எனது வார்டில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அசோகன் (தி.மு.க.):- திருவாரூர் நகரில் நீண்ட நாள் கோரிக்கையான மடப்புரம் நடைபாலத்தை அமைச்சர் நேரு நேரில் பார்வையிட்டு, புதிய பாலம் கட்டிட நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் நேருவிற்கும், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வுக்கும், நகர மன்ற தலைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அடிப்படை தேவைகள்

ரஜினி சின்னா (தி.மு.க.):- எனது வார்டில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும். அடிப்படை தேவைகளை காலதாமதமின்றி செய்துதர வேண்டும்.

நகரசபை தலைவர்:- அனைத்து வார்டு உறுப்பினர் கோரிக்கைகள் மீதும் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேணடும். அத்தியாவசிய கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் இந்தியவிலேயே முன்னோடி திட்டமான காலை உணவு திட்டத்தை பள்ளிகளில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story