ஆட்டோவில் தவற விட்ட செல்போனை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு

ஆட்டோவில் தவற விட்ட செல்போனை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
x

ஆட்டோவில் தவற விட்ட செல்போனை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் நடு கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சோமசுந்தரம் நேற்று மாலை பயணிகளுடன் கூடலூர் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பின்னர் பயணிகள் சென்ற பிறகு யாரோ விட்டுச் சென்ற செல்போன் கிடப்பதைக் கண்டார்.

இதைத்தொடர்ந்து சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கூடலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் டிரைவர் சோமசுந்தரத்தை பாராட்டினர். பின்னர் செல்போன் காணாமல் போனது குறித்து கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த விஷ்ணு சூர்யா என்ற மாணவர் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் போலீசார் செல்போனை ஒப்படைத்தனர்.

Next Story