சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு


சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் நகராட்சியில் சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியில் தூய்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நகராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி தூய்மை பணியாளர்கள் 6 பேருக்கு சால்வை அணிவித்து மரக்கன்றுகளை வழங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் வெங்கட்டலட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவர்சியர் குமரன் வரவேற்றார். முடிவில் இளநிலை உதவியாளர் விரபத்திரன் நன்றி கூறினார்.


Next Story