தங்கப்பதக்கம் வென்ற வனக்காப்பாளருக்கு பாராட்டு


தங்கப்பதக்கம் வென்ற வனக்காப்பாளருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவில் தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வனக்காப்பாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

வனத்துறையினருக்கான தேசிய அளவிலான தடகள போட்டிகள் அரியானா மாநிலத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட அளக்கரையில் பணிபுரிந்து வரும் வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். அவர் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் வென்றார். இதைத்தொடர்ந்து நேற்று ராஜேஷ்குமாருக்கு பாராட்டு விழா ஊட்டியில் நடைபெற்றது. விழாவில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் அருண், விஜயா, உதவி வனப்பாதுகாவலர் தேவராஜ் ஆகியோர் சாதனைப் படைத்த வனக்கபப்பாளர் ராஜேஷ்குமாரை பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தனர்.


Next Story