சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கரூர் தாந்தோணி ஒன்றியம் , கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவி பூமிதா 10 வயதிற்கு கீழ் உள்ளோர் பிரிவில் கலந்து கொண்டு விளையாடி 2 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவி பூமிதாைவ நேற்று தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி பள்ளிக்கு நேரில் வந்து பாராட்டினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story