கீழே கிடந்த மணி பர்சை போலீசில் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு


கீழே கிடந்த மணி பர்சை போலீசில் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு
x

கீழே கிடந்த மணி பர்சை போலீசில் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லி தோப்பில் தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்திற்கு கீழே கிடந்த மணி பர்சை நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 65) என்பவர் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த மணி பர்சில் ரூ.1,100 இருந்தது.

இதையடுத்து, மீன்சுருட்டி தலைமை காவலர் சதீஷ்குமார் முதியவரின் சேவையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.


Next Story