கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய வாலிபரை பிடித்த போலீசாருக்கு பாராட்டு


கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய வாலிபரை பிடித்த போலீசாருக்கு பாராட்டு
x

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய வாலிபரை பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் அண்ணா நகர் பகுதியில் கடந்த 4-ந்தேதி இரவு அடுத்தடுத்து 3 மளிகை கடைகளின் பூட்டுகளை உடைத்து ரூ.11 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை திருடி கொண்டு தப்பி ஓடிய சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் 2-வது தெருவை சேர்ந்த கார்த்திக்கை (வயது 21) ரோந்து பணியில் இருந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பல மாவட்டங்களில் பல்வேறு திருட்டு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்றும், இவர் கடந்த மாதம் 27-ந்தேதி வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்து வந்த 6 பேரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே கார்த்திக்கை கைது செய்த இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், சித்ரா உள்ளிட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


Next Story