சத்துவாச்சாரி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு


சத்துவாச்சாரி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
x

கெங்கையம்மன் கோவில் சார்பில் சத்துவாச்சாரி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) அம்மன் விஸ்வரூபக் காட்சி எனும் நிகழ்ச்சி செங்குந்தர் சமுதாயத்தினர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

விழாவில் ஒரு வார காலமாக தூய்மைப்பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சத்துவாச்சாரி மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கோவில் சார்பில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன் மற்றும் கவுன்சிலர் சுமதி மனோகரன் ஆகியோர் மரியாதை செலுத்தி வேட்டி, சட்டைகள், சேலைகள் வழங்கி பாராட்டினர்.

இதில் செங்குந்த சமுதாய கமிட்டி தலைவர் சுகுமார், செயலாளர் சுந்தரம், பொருளாளர் மார்க்கபந்து மற்றும் ஊர் பெரியவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story