முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு


முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு
x

முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

வேலூர்

முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பொருளியல் துறையில் பயின்று வரும் மாணவர் தேசிய மாணவர் படையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் தேசிய அளவில் 17 என்.சி.சி. இயக்குனரகங்களுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற தல்சானிக் போட்டியில் பங்கு பெற்றார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி அந்தமான் அடங்கிய இயக்குனரகம் தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தது.

இதற்கு மாணவரின் பங்களிப்பு உள்ளதால் அவரை கல்லூரி முதல்வர் மலர் என்.சி.சி. ஆடம் ஆபீசர் லெப்டினட் கர்னல் சுந்தரம், தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினட் பரசுராமன் மற்றும் துறை தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் பாராட்டினர்.


Next Story