சிலம்ப போட்டியில் பரிசு பெற்ற மாணவனுக்கு பாராட்டு
சிலம்ப போட்டியில் பரிசு பெற்ற மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர்
வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பில் படிக்கும் மாணவன் முகமதுபாரிஸ்(வயது 6). இந்த மாணவன் அண்மையில் கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில், 10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாடி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றார். இதனையடுத்து மாணவன் முகமதுபாரிசுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் தர்மலிங்கம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.
Related Tags :
Next Story