நெடும்பலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


நெடும்பலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x

நெடும்பலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆஷா மற்றும் மாணவர்கள் பரத்ராம், காவிய தர்ஷன், விக்னேஸ்வரன், சாய்ராம் ஆகிய 5 பேர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட அளவில் 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ரூ.1000 வீதம் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் தங்கராசு, உதவி தலைமை ஆசிரியர்கள் கலைச்செல்வன், அன்பு, குமார், ஆசிரியர்கள் கோமதி, சின்னத்துரை, ஜெயராமன், மரிய செல்வராணி, ஜெயா ஆகியோர் பாராட்டினர்.


Next Story