ஆசிரியை தவறவிட்ட நகையை ஒப்படைத்த மாணவிகளுக்கு பாராட்டு


ஆசிரியை தவறவிட்ட நகையை ஒப்படைத்த மாணவிகளுக்கு பாராட்டு
x

ஆசிரியை தவறவிட்ட நகையை ஒப்படைத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி

நரிக்குடி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் நேற்று பள்ளிக்கு செல்ல வேண்டி நரிக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தனது கைப்பையில் உள்ள அவரது நகைகளை சரிபார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உலக்குடி பஸ் வந்தவுடன் அவசரமாக பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டார். பின்னர் தனது கைப்பையை சரிபார்த்த போது அதில் 2½ பவுன் தங்க செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் நரிக்குடி ெதாடக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகள் நரிக்குடியை சேர்ந்த மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த தேவிகா ஆகியோர் கீழே கிடந்த நகையை எடுத்து தலைமை ஆசிரியர் சோனை முத்துவிடம் கொடுத்தனர். இதுகுறித்து நரிக்குடி போலீசாருக்கு சோனை முத்து தகவல் கொடுத்தார். பின்னர் ஆசிரியரை வரவழைத்து அவரது நகை தானா என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 3 மாணவிகளின் நேர்மை குணத்தை தலைமை ஆசிரியர், ஆசிாியர், போலீசார் ஆகிேயார் பாராட்டினர்.


Next Story