ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடியில் உள்ள புனித அன்னை தெரசா என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான சூற்றுச்சூழலை புரிந்துகொள்ளுதல் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்கள் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
அதில், திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வேதா, தயாஸ்ரீ ஆகியோர் நெகிழி பயன்பாட்டை குறைத்தல் தொடர்பான ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.
விழாவில், அந்த மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பள்ளியில் நடந்த விழாவில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த மாணவிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியை நித்யாவுக்கும் தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.