எழுத்தாளர் உதயசங்கருக்கு பாராட்டு
பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கருக்கு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய 'ஆதனின் பொம்மை' நாவலுக்கு சாகித்ய அகாடமியின் 'பால புரஸ்கார்' விருது கிடைத்தது. ரெயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற உதயசங்கர் பின்னர் கரிசல் எழுத்தாளராக திகழ்ந்தார்.
இதையொட்டி கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர் சங்கம் சார்பில், எழுத்தாளர் உதயசங்கருக்கு பாராட்டு விழா நடந்தது. சங்க தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் தங்கவேலு, பொருளாளர் முருகையா, நாராயணன், பட்டம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினா். உதயசங்கருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் அவர் ஏற்புரை வழங்கினார்.
Next Story