குற்றாலத்தில் சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு


குற்றாலத்தில் சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தார். அருவியின் முன்புள்ள தடாகத்தில் நவநீதகிருஷ்ணனின் மகள் ஹரிணி (வயது 4) குளித்தபோது, தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக அவள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள்.

அப்போது இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்த வாடகை கார் டிரைவரான விஜயகுமார் (24) விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

அருவி தடாகத்தில் குளித்த சிறுமி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய விஜயகுமாரை பலரும் பாராட்டினர். விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் தனது இல்லத்துக்கு விஜயகுமாரை வரவழைத்து பாராட்டினார்.


Next Story