சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு


சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
x

காவல்துறை பல்பொருள் அங்காடியில் சிறப்பாக பணியாற்றியவர்களை சூப்பிரண்டு பாராட்டினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே பாச்சல் பகுதியில் மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் காவல்துறை பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. அங்காடியில் விலை குறைவாகவும், தரமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட காவல்துறை பல்பொருள் அங்காடியில் மாதத்திற்கு ரூ.25 லட்சம் வரை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அங்காடியில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், காவலர் குமரன், பெண் காவலர்கள் ஜெயந்தி, மீனா ஆகியோர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


Next Story