குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி


குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா  உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா உண்டியல் காணிக்கையாக ரூ.3½ கோடி கிடைத்துள்ளது.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்தினர்.

உண்டியல் எண்ணிக்கை

இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கடந்த 5 நாட்களாக நடந்தது. கோவில் நிரந்தர உண்டியல்கள் 13, தற்காலிக உண்டியல்கள் 56 என மொத்தம் 69 உண்டியல்களில் கிடைத்த காணிக்கை எண்ணப்பட்டது.

இந்து அறநிலையத்துறை துணை ஆணையர்கள் வெங்கடேஷ், ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர்கள் கோமதி, கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவிகள், பிறைகுடியிருப்பு சிவந்தி கல்லூரி மாணவிகள், உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

ரூ.3½ கோடி

இதில் பக்தர்கள் ரூ.3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114-ஐ காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 134.80 கிராம் தங்கமும், 2 கிலோ 416 கிராம் வெள்ளியும் கிடைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு காணிக்கையை ஒப்பிடும்போது, ரூ.1 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காணிக்கை எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story