குலசேகரன்பட்டினம் சுந்தராச்சி அம்மன் கோவில் திருவிழா


குலசேகரன்பட்டினம்  சுந்தராச்சி அம்மன்   கோவில் திருவிழா
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் சுந்தராச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் அனுகூலபுரம் தமிழ்நாடு நாட்டார் மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தராச்சி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந் தேதி இரவு 7 மணிக்கு சங்குமுக தீர்த்தவாரியுடன் தொடங்கியது. இரவு 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 10 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசையும், காலை 11 மணிக்கு மஞ்சள் பெட்டி எடுத்தல், பகல் 12 மணிக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி எடுத்தல், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்புஅலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கொடை விழா நிறைவு பெற்றது.


Next Story