குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்உண்டியல் வருவாய் ரூ.48¾ லட்சம்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்உண்டியல் வருவாய் ரூ.48¾ லட்சம்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.48¾ லட்சம் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உள்ள 13 நிரந்தர உண்டியல்கள், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணிக்கை தென்காசி உதவி ஆணையர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ரூ.48 லட்சம் 71 ஆயிரத்து 187-ஐ ரொக்கமாக செலுத்தியிருந்தனர். தங்கம் 234 கிராம், 100 மில்லி கிராம், வெள்ளி 1,792 கிராம் இருந்தது. இந்த உண்டியல் வசூல் எண்ணிக்கையில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், சாத்தான்குளம் ஆய்வாளர் பகவதி, அயல்பணி கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி, கோவில் கணக்கர் டிமிட்ரோ, உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் பக்தர்கள் ஈடுபட்டனர்.


Next Story