கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழி


கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழி
x
திருப்பூர்


திருப்பூர் - காங்கயம் செல்லும் சாலையில் குழாய் அமைக்க, தார்ச் சாலையை விரிவுபடுத்த மற்றும் கேபிள் பதிக்க என பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. பல மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்த செல்லும் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

 திருப்பூர் நல்லூர் பஸ் நிறுத்தம் அருகே பல மாதங்களாக தோண்டப்பட்டுள்ள குழியானது மூடப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் பயணிகள் தடுமாறி விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. நல்லூர் நால்ரோடு பகுதியில் இக்குழி இருப்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே விரைவாக பணிகளை முடித்து குழிகளை மூட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story