குமரகோவில் குடமுழுக்கு


குமரகோவில் குடமுழுக்கு
x

திருவாரூர் குமரகோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் குமர கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம் மேளதாளங்களுடன் புறப்பட்டு கோவில் விமான கலசங்களை அடைந்தது. தொடர்ந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதன் பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.


Next Story