குமரிக்கு 4,500 டன் கோதுமை வந்தது


குமரிக்கு 4,500 டன் கோதுமை வந்தது
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் இருந்து குமரிக்கு 4,500 டன் கோதுமை வந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மத்திய பிரதேசத்தில் இருந்து குமரிக்கு 4,500 டன் கோதுமை வந்தது.

குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து 4,500 டன் கோதுமை மூடைகள் ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சரக்கு ரெயிலில் 40 வேகன்களில் இந்த கோதுமை வந்தது. பின்னர் கோதுமை மூடைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கோதுமை மூடைகளை ஏற்றுவதற்காக ரெயில்வே ரோட்டில் ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


Next Story