தேன்கனிக்கோட்டையில் சேலத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் சேலத்து மாரியம்மன் மற்றும் எல்லம்மன் தேவி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி, கங்கா பூஜைகள், பால்குட ஊர்வலம், உற்சவ விகரங்கள் ஊர்வலம், பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக கலாகர்சன ஹோமங்கள், பூர்ணாவதி, எல்லம்மா தேவி, ராஜகோபுரத்தின் மீது குருக்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் சேலத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
Next Story