அத்திமர வெங்கடேச பெருமாளுக்கு கும்பாபிஷேக ஆராதனை


அத்திமர வெங்கடேச பெருமாளுக்கு கும்பாபிஷேக ஆராதனை
x

காந்திநகரில் அத்திமர வெங்கடேச பெருமாளுக்கு கும்பாபிஷேக ஆராதனை நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி காந்திநகரில் ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபம் உள்ளது. இங்கு 8.2 அடி உயரத்தில் 5 அடி அகலத்தில் ஒரே அத்தி மரத்தால் வெங்கடேச பெருமாள் சிலை புதிதாக செய்யப்பட்டுள்ளது. இதில் தசாவதாரங்கள் பதிய பெற்றுள்ளது.

இந்த வெங்கடேச பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நேற்று காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடந்தது. அதை முன்னிட்டு நேற்று முன்தினம் நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். நேற்று காலை ஆராதனை வைபவத்தை தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும், பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

ஆராதனை விழாவில் சங்கீதா கதிர்ஆனந்த், வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மாநகராட்சி கவுன்சிலர் கே.அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திருமண மண்டப உரிமையாளர் டி.பாலமுரளி, சவுமியா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story