காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்


காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
x

காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

தா.பேட்டை:

தா.பேட்டையில் காசி விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள 5 நிலை ராஜகோபுரம், சுவாமி, அம்மன் மற்றும் சுற்றியுள்ள கோபுரங்களில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, யாக வேள்வி, திரவிய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நேற்று நான்காம் காலம் கணபதி பூஜை, நாடிசந்தானம், யாத்ராதானம், பூர்ணாஹுதியை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் 5 நிலை ராஜகோபுரம், சுவாமி, அம்மன், சண்டிகேசுவரர் மற்றும் பரிவார சுவாமிகளின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர், ராஜகணபதி, ஆறுமுக பெருமான், பஞ்சமுக பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீகுமரன் ரியல் எஸ்டேட் இ.துரைசெல்வன், நந்தி தேநீர் விடுதி கே.ரவிக்குமார், கே.எஸ்.மோட்டார்ஸ் கே.எஸ்.குமார், மம்மி ஸ்டோர்ஸ் கே.ஜி.நந்தகுமார், ராணி கேபிள் கம்யூனிகேசன் எம்.ஸ்ரீநிவாஸ், சிவனடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story