மகேந்திரகிரிநாதர் சன்னதியில் கும்பாபிஷேகம்


மகேந்திரகிரிநாதர் சன்னதியில் கும்பாபிஷேகம்
x

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் மகேந்திரகிரிநாதர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில் வளாகத்தில் மகேந்திரகிரிநாதர் சன்னதி புதிதாக கட்டப்பட்டு கும்பாபிேஷக விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் சிகர நாளான நேற்று காலையில் சிறப்பு பூஜைகள், 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் விமானத்துக்கும், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story