முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதிபூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக தீப ஆராதனை, 3 கால யாகசாலை பூஜைகள், மூலிகை ஹோமங்கள், நாடி சந்தானம், வருண பூஜை, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 4-வது கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவர்ச்சனை, மூலிகை ஹோமங்கள், மகாபூர்ணாதி, மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னா் யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து காலை 9 முதல் 10.15 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கும் அதைத் தொடர்ந்து மூலவர் முத்துமாரியம்மன் மற்றும் செல்வவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், முத்தாலம்மன், பிடாரியம்மன் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேக நடைபெற்றது. விழாவில் காரப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.