இரட்டை பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்
செஞ்சி இரட்டை பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்
செஞ்சி
செஞ்சி-திருவண்ணாமலை சாலை தேசூர் பாட்டை எதிரில் அரச மரத்தடியில் உள்ள இரட்டை பிள்ளையார் வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை விநாயகர் பூஜையுடன் விழா தொடங்கி தமிழில் யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விநாயகர் கோவில் கோபுரத்துக்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அகில இந்திய விஸ்வகர்மா பேரவை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் திருமுறை கழகத்தினர் செய்திருந்தனர்.