ஏழுஊர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ஏழுஊர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 4 Nov 2022 1:00 AM IST (Updated: 4 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கல்லுகுட்டை கிராமத்தில் ஏழுஊர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:-

காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சி கல்லுக்குட்டை கிராமத்தில் ஏழு ஊர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து அம்மனுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டு மங்கள இசையுடன் முதல் கால பூஜை, நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமத்துடன் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.. நிகழ்ச்சியில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில் பரம்பரை தர்மகர்த்தா கே.தனகோடி சந்திரா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பையூர் பெ.ரவி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, மாவட்ட பால்வள தலைவர் குப்புசாமி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், கூட்டுறவு சங்க தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பழைய பேட்டை சுந்தர விநாயகர் குருக்கள் வெங்கடேசன், முத்துக்குமார் ஆகியோர் பூஜைகள் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story