மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்


மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
x

மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பட்டமரத்து மாரியம்மன் கோவில் மற்றும் வரகனேரி நித்தியானந்தபுரம் பகுதியில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து கோவில்களுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து 4 கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை பட்டமரத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முத்துக்கண் மாரியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது. 26 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story