அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
அப்பா பைத்தியம் சாமி கோவில்
சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை, மங்கள வாத்தியம், புனித நீர் வழிபாடு நடந்தது. 5-ந் தேதி காலை வேள்வி பூஜை, இரவு 7 மணிக்கு முதல் கால வேள்வி, இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.
இன்று கும்பாபிஷேகம்
தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. 8.40 மணிக்கு சற்குருவுக்கு 108 திரவியங்கள் மூலம் வழிபாடு நடத்தப்பட்டன. மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை சற்குருவிற்கு 108 திரவிய வழிபாடு நடக்கிறது. 9.45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது. 10.15 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகாதீபாராதனை நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சற்குரு அப்பா பைத்தியம் சாமி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ள உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கோவில் முன்பு சொக்கநாதர், மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.