பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்


பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:45 AM IST (Updated: 13 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்

பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவில் மிகவும் பழமையானது. இங்கு இடும்பன், கடம்பன் மற்றும் முருகப்பெருமானுக்கு தனி சன்னதிகள் உள்ளன. பழனி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இடும்பன் கோவில் அருகே உள்ள இடும்பன்குளத்தில் புனித நீராடுகின்றனர். பின்னர் அவர்கள், இடும்பன் கோவிலில் வழிபட்ட பிறகே பழனி மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசிக்கின்றனர்.

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 26 ஆண்டுகள் ஆகிறது. எனவே பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கோவிலில் சிதிலம் அடைந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதேபோல் கோவில் பிரகாரத்தில் உள்ள பழைய கற்கள் அகற்றப்பட்டு புதிய கருங்கல் பதிக்கும் பணி நடைபெறுகிறது. திருப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் விரைவில் தேதி அறிவிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story