வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூர் வலையங்காட்டில் உள்ள தனியார் கிளீனிக் அருகில் கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி மாலை அங்கேரிப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீசந்தோஷ் என்பவர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் ஸ்ரீசந்தோசை தூக்கிச்சென்று பணம் பறித்தனர். இதுதொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் காந்திநகரை சேர்ந்த சூர்யா (25) உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூர்யா மீது ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, 4 வழிப்பறி வழக்குகள், 4 திருட்டு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள சூர்யாவிடம், ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.