வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் உடுமலை புக்குளம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 40). இவர் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் தங்கி மனம் போன போக்கில் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2-12-2022 அன்று தலையில் ரத்த காயத்துடன் புக்குளம் பஸ் நிலையத்தில் தனலட்சுமி இறந்து கிடந்தார். உடுமலை போலீசார் சென்று விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (33), தனலட்சுமியை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரையின் பேரில் ஆரோக்கிராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள ஆரோக்கியராஜிடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.


Next Story