மலையாண்டி கோவிலில் குத்துவிளக்கு பூஜை


மலையாண்டி கோவிலில் குத்துவிளக்கு பூஜை
x

மலையாண்டி கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி பொன்- வையாபுரிப்பட்டியில் மலையாண்டி கோவில் உள்ளது. இக்கோவிலில் 19-ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பொன்-வையாபுரிப்பட்டி, வலையப்பட்டி, கோவில்பட்டி, புதுவளவு, அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வேந்தன்பட்டியில் உள்ள நெய் நந்தீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.


Next Story