குட்கா கடத்தி வந்த லாரி மரத்தில் மோதியது


குட்கா கடத்தி வந்த லாரி மரத்தில் மோதியது
x

தஞ்சை அருகே குட்கா கடத்திச் சென்ற லாரி மரத்தில் மோதியதில் மைசூரை சேர்த்த 2 பேர் காயம் அடைந்தனர்..

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே குட்கா கடத்திச் சென்ற லாரி மரத்தில் மோதியதில் மைசூரை சேர்த்த 2 பேர் காயம் அடைந்தனர்..

லாரியில் குட்கா கடத்தல்

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் லாரியில் கடத்தப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதன் பேரில் நேற்று புதுக்கோட்டை- தஞ்சை சாலையில் வந்த ஒரு லாரியை தனிப்படை போலீசார் விரட்டிச் சென்றனர்.லாரி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை மெயின் சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், குட்கா லாரியில் பயணம் செய்த மைசூர் ஒக்கேரியைச் சேர்ந்த யஸ்வந்த் (வயது 25), காசம்பாடியைச் சேர்ந்த நிகில் (25) ஆகிய இருவர் காயமடைந்தனர். இருவரையும் தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் விசாரணை

லாரியில் கடத்திவரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது குறித்து தஞ்சை மாவட்ட போலீசாருக்கும், புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து லாரியை விரட்டி வந்ததால் அவர்கள் புகையிலை பொருட்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story