வளர்ச்சித்திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


வளர்ச்சித்திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் அறிவுறுத்தினார்.

கண்காணிப்பு அதிகாரி

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலாளரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் கூறியதாவது:-

மக்கள் குறைகேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து துறைகளின் சார்பில் நடக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு துறை அலுவலர்களும் தாங்கள் செயல்படுத்தும் திட்டங்களை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக்கூட்டத்தில்மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா, அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இ-சேவை மையம்

முன்னதாக கரைப்புதூர் ஊராட்சியில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள துணிபதனிடும் தொழிற்சாலை, பல்லடம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் தாசில்தார் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அவினாசி-திருப்பூர் மற்றும் பல்லடம்-பொள்ளாச்சி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணிகள் ஆகியவற்றை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Next Story