விவசாய பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்


விவசாய பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அப்பகுதியில் பயிரிடப்படும் பயிர்வகைக்கு ஏற்ற வேளாண் எந்திரங்கள், கருவிகளை தேர்வு செய்வதற்கு கலந்தாய்வு கூட்டம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, சரக இணைப்பதிவாளர் மற்றும் வட்டார கள அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுவு சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள்,கருவிகள் பிபிடி வீடியோ வாயிலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் அறியும் வண்ணம் காட்டுப்படுத்தி விரிவாக விளக்கி கூறப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாய பிரதிநிதிகள் இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.


Next Story