குட்டையை தூர்வாரியதில் முறைகேடு


குட்டையை தூர்வாரியதில் முறைகேடு
x
திருப்பூர்


உடுமலை அருகே உள்ள ஆண்டிகவுண்டனூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குட்டையில் தூர் வாரிய பணியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

குட்டை புதுப்பித்தல் பணி

உடுமலை அருகே உள்ள ஆண்டியகவுண்டனூர்உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களின் நீராதாரமாக விளங்கும் இந்த குட்டை ஆவணப்படி 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இந்த குட்டையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது காளியாபுரம், உரல்பட்டி, மலையாண்டிகவுண்டனூர், கண்ணாடிப்புத்தூர்,பாப்பான் குளம் கிராமங்களை கடந்து அமராவதி ஆற்றில் கலக்கும் இந்த நெடுந்தூர பயணத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

ஆனால் இந்த குட்டைக்கு நீர்வரத்தை அளிக்கக்கூடிய நீர் வழித்தடங்கள் முழுமையாக பராமரிக்கப்படாததால் அடைமழை காலத்தில் கூட முழுமையாக நிரம்பாமல் தவித்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது.

முறைகேடுகுட்டையை தூர்வாரியதில் முறைகேடு

அப்போது எலையமுத்தூர் நெடுஞ் சாலையை ஒட்டிய பகுதி மட்டும் பெயரளவுக்கு தூர்வாரப்பட்டது. நீர்வழித்தடத்தில் அமைந்துள்ள பள்ளத்தை தூர்வாரவில்லை. அதுமட்டுமின்றி இந்த குட்டை 33 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும் ரூ.29 ஆயிரத்து 100-க்கு புதுப்பித்தல் பணி நடைபெற்று உள்ளதாகவும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தவறான தகவல்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

ஆவணப்படி 9 ஏக்கர் பரப்பளவு கொண்டகுட்டையை 33 ஏக்கர் என்று அதிகாரிகள் தெரிவித்துஉள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதுவே முறைகேடு நடந்ததற்கான சான்று ஆகும். எனவே ஆண்டியகவுண்டனூர் குட்டையை புதுப்பித்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து குட்டையின் உண்மை தன்மையை விளக்கிகல்வெட்டு அமைப்பதுடன் அதை முழுமையாக தூர்வாரி நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story