தொழிலாளர் காங்கிரசார் ராகுல்காந்தி நடைபயணத்தில் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்ட தொழிலாளர் காங்கிரசார் ராகுல்காந்தி நடைபயணத்தில் பங்கேற்கின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் எஸ்.கிஷோர்பிரசாத் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் மகேஷ்வரன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவது, ராகுல்காந்தியின் நடைபயனத்தை தமிழகத்தில் வெற்றி பெற செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்ளும் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரிக்கு கார் மற்றும் வேன் மூலம் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story